என் மலர்
செய்திகள்

குருநானக் பிறந்த நாள்: இந்திய சீக்கியர்களுக்கு விசா வழங்கிய பாக். தூதரகம்
பாகிஸ்தானில் உள்ள சீக்கிய மதகுரு குருநானக் பிறந்த இடத்திற்கு செல்ல விண்ணப்பித்த 2600 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கியுள்ளது.
புதுடெல்லி:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சீக்கிய மத குருவான குருநானக் தேவின் பிறப்பிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் இங்கு குருநானக்கின் பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதற்காக, உலகமுழுவதும் உள்ள சீக்கிய மதத்தவர்கள் இங்கு வருகை தந்து சிறப்பு வழிபாடுகள் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெற உள்ள விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் பலர் விசாவுக்காக விண்ணப்பித்திருந்தனர். இதனை பரிசீலித்த பாகிஸ்தான் தூதரகம் 2600 இந்தியர்களுக்கு விசா வழங்கியுள்ளது. இதனையடுத்து, விசா கிடைக்கப்பெற்ற சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு பயணமாக உள்ளனர்.

Next Story