என் மலர்

    செய்திகள்

    காதலனால் சீரழிக்கப்பட்ட பெண்ணின் ஆபாச வீடியோவை காட்டி கற்பழித்த போலீஸ் அதிகாரி
    X

    காதலனால் சீரழிக்கப்பட்ட பெண்ணின் ஆபாச வீடியோவை காட்டி கற்பழித்த போலீஸ் அதிகாரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேரளாவில் காதலனால் சீரழிக்கப்பட்ட பெண்ணின் ஆபாச வீடியோவை காட்டி கற்பழித்த போலீஸ் அதிகாரியையும், அந்த பெண்ணின் காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பேரூர்கடை சாருவிளக்கு சந்தானம் நகரை சேர்ந்தவர் நிதின்வில்சன் (வயது 42). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி பழகினார்.

    நிதின் வில்சனை நம்பிய இளம்பெண் அவருடன் பல இடங்களுக்கு சென்றார். அப்போது இருவரும் உல்லாசம் அனுபவித்தனர். 2 மாதங்களாக இவர்களின் உல்லாசம் நீடித்தது.

    இந்நிலையில் நிதின்வில்சனின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதில் சந்தேகம் அடைந்த இளம்பெண் திருமணம் குறித்து பேசினார். ஆனால் அவர் மறுத்து விட்டார். உல்லாசத்துக்கு மட்டுமே பழகினேன் என்று கூறினார்.

    அதிர்ச்சியடைந்த இளம்பெண் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வருத்தப்பட்டார். இந்நிலையில் நிதின் வில்சன் மீண்டும் இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்தார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர் இளம்பெண்ணின் தோழிக்கு ஒரு வீடியோவை அனுப்பினார். அதில் நிதின் வில்சனும் இளம்பெண்ணும் உல்லாசமாக இருந்த காட்சிகள் இருந்தன.

    அனுப்பிய சிறிது நேரத்தில் செல்போனில் தொடர்பு கொண்ட நிதின்வில்சன் உனது தோழி என்னுடன் தொடர்ந்து உல்லாசமாக இருக்க சம்மதிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரப்பிவிடுவேன் என்று மிரட்டினார்.

    அதிர்ச்சியடைந்த அவர் இளம்பெண்ணிடம் இது குறித்து கூறினார். வீடியோ காட்சிகளை பார்த்த இளம்பெண் தனக்கு தெரியாமல் நிதின் வில்சன் ரகசியமாக படம் எடுத்துள்ளது தெரியவந்தது.

    தோழிகள் இருவரும் சேர்ந்து தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களிடம் கூறி நிதின் வில்சனை சமாதானப்படுத்தி வீடியோ பதிவை அழித்து விட முயற்சி மேற்கொண்டனர். அதன்படி நண்பர்கள் சிலர் முன் வந்தனர்.

    இதில் திருவனந்தபுரம் சிட்டி போலீஸ் கண்ட்ரோல் ரூமில் போலீஸ் அதிகாரியாக உள்ள வீரப்பங்கோடு பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (41) என்பவரும் இளம்பெண்ணுக்கு ஆதரவாக வந்தார். மற்ற நண்பர்கள் இளம்பெண்ணை சிக்கலில் இருந்து காப்பாற்றி நினைத்தனர். ஆனால் போலீஸ்காரர் அபிலாஷ் மட்டும் இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை தனது செல்போனில் பதிவேற்றம் செய்தார்.

    இளம்பெண்ணின் அழகில் மயங்கிய போலீஸ்காரர் என்னுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நிர்வாண வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டினார். மிரட்டலுக்கு பயந்த இளம்பெண் போலீஸ்காரரின் ஆசைக்கு இணங்கினார்.

    நிர்வாணப்படத்தை காண்பித்து போலீஸ்காரரும் 2 மாதமாக இளம்பெண்ணை கற்பழித்தார். 2 பேரிடமும் சிக்கிய இளம்பெண் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். போலீஸ்காரரும் தன்னை சீரழித்து விட்டார் என்று தோழிகளிடம் கூறி அழுதார்.

    இதனையடுத்து மீண்டும் நண்பர்கள் கூடினர். இது குறித்து திருவனந்தபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அனுப்பிடம் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த அனுப் இளம்பெண்ணின் காதலன் நிதின்வில்சன் மற்றும் போலீஸ்காரர் அபிலாஷ் ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து செல்போன்களை உடனே பறிமுதல் செய்தார்.

    Next Story
    ×