search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
    X

    முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

    முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் பராமரிப்பு பணி மேற்கொள்ள தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும் அனை பராமரிப்பு பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை நிலவுவதால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அணை பராமரிப்பு பணியை மேற்கொள்ள சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள வனத் துறையினர் அனுமதிக்க மறுத்து தகராறு செய்தனர்.



    இதுபற்றி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது. இதற்கு பதில் அளித்த கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு உறுதியற்ற நிலையில் இருப்பதால் தான் அனுமதி மறுத்ததாக தெரிவித்தது.



    இதையடுத்து தமிழக அரசு அதற்கு எழுத்துப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அதில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அணையின் உறுதித்தன்மை பல கட்ட சோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே அணை பராமரிப்பு பணி மேற்கொள்ள தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×