என் மலர்

  செய்திகள்

  இந்தியாவில் 29 லட்சம் குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசி போடவில்லை: உலக சுகாதார நிறுவனம் தகவல்
  X

  இந்தியாவில் 29 லட்சம் குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசி போடவில்லை: உலக சுகாதார நிறுவனம் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் 29 லட்சம் குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசி போடப்படுவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
  புதுடெல்லி :

  உலகம் முழுவதும் தட்டம்மை நோயினால் ஆண்டுக்கு சுமார் 90 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 2000ம் ஆண்டில் இந்நோயினால் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியாயினர். ஆனால் அப்படியிருந்தும், ஆண்டுக்கு சுமார் 2 கோடியே 8 லட்சம் பேர் தட்டம்மை தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை என உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டடோர் நைஜீரியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளனர்.

  அதிகபட்சமாக நைஜீரியாவில் 33 லட்சம் பேரும், இந்தியாவில் 29 லட்சம் பேரும், பாகிஸ்தானில் 20 லட்சம் பேரும், இந்தோனேஷியாவில் 12 லட்சம் பேரும், எத்தியோப்பியாவில் 9 லட்சம் பேரும், காங்கோவில் 7 லட்சம் பேரும் தட்டம்மை தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை.

  ‘‘தட்டம்மை தடுப்பூசி மூலமாக ஆண்டுக்கு சராசரியாக 13 லட்சம் உயிர்கள் காப்பற்றப்படுகிறது. இதை இன்னும் தீவிரப்படுத்தினால் தட்டம்மையை முற்றிலும் ஒழித்து விடுலாம்’’ என தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பு அமைப்பு தலைவர் ராபர்ட் லிங்கிஸ் கூறியுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பு அமைப்பு, அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், யுனிசெப் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. அதனால்தான் தட்டம்மை பலி ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

  இதுகுறித்து உலக சுகாதார நிறுவன இயக்குனர் ஜீன் மேரி ஒக்வோ பீலே பேசுகையில், ‘‘கடந்த 20 ஆண்டுகளாக தட்டம்மை பலி வெகுவாக குறைந்துள்ளது. இதை விறைவில் முற்றிலும் ஒழிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை தடுப்பூசி போட்டால்தான் இதை முற்றிலும் ஒழிக்க முடியும்’’ என்றார்.
  Next Story
  ×