என் மலர்

  செய்திகள்

  திருமணமான ஒரு மாதத்தில் கணவரை உதறி விட்டு காதலனை கரம் பிடித்த பெண்
  X

  திருமணமான ஒரு மாதத்தில் கணவரை உதறி விட்டு காதலனை கரம் பிடித்த பெண்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணமான ஒரு மாதத்தில் கணவரை உதறி விட்டு காதலனை பெண் கரம் பிடித்த சம்பவம் கேரளாவில் நடந்தேறியுள்ளது.
  கேரளா:

  பாகுபலி பட பிரம்மாண்டத்தை போல் செட்டிங்... 100 பவுன் நகை, சொகுசு கார், லட்சக்கணக்கில் செலவு செய்து கேரளாவில் கடந்த மாதம் கோழிக்கோடு நாதபுரத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், வாலிபருக்கும் ஊரே திரும்பி பார்க்கும் வகையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

  சந்தோ‌ஷமாக வாழ்க்கையை தொடங்கிய ஒரு மாத காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த காதலனை பார்த்ததும் மனம் மாறிய அந்த பெண், காதலனுடன் தான் செல்வேன், கணவன் வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்து காதலனையே கரம் பிடித்தார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

  கேரள மாநிலம் கோழிக்கோடு நாதபுரத்தை சேர்ந்த ஒரு பணக்கார இளம்பெண், ஒரு வாலிபரை காதலித்து வந்தார். அந்த வாலிபர் வெளிநாட்டுக்கு சென்றதாலும், பெற்றோர் எதிர்ப்பாலும் காதலனை கரம் பிடிக்க முடியவில்லை.

  இந்த நிலையில் பெற்றோரின் நெருக்கடியால் கோழிக்கோடு அருகே உள்ள பானூரை சேர்ந்த ஒரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முன் வந்தார்.

  அதன்படி இவர்களுக்கு திருமணம் ஏற்பாடுகள் கடந்த மாதம் தடபுடலாக நடந்தது. ஊரே திரும்பி பார்க்கும் வகையில் பாகுபலி சினிமா செட்டிங், நகைகள், சொகுசு கார், தடபுடல் விருந்து என ஊரே திருவிழா போல் களை கட்டியது. திருமணத்துக்கு வந்தவர்கள் ரசித்து சென்றனர். திருமணம் முடிந்ததும் புதுப்பெண், கணவர் வீட்டிற்கு சென்றார். அங்கு ஆயிரம் வசதிகள், வேலையாட்கள் இருந்தாலும் ஏனோ ஒன்றை இழந்தது போல் சோகமாகவே காணப்பட்டார்.

  கணவரும் புது இடம் என்பதால் தான் வெட்கத்துடன் இருக்கிறார் என்று நினைத்து மனைவியை பல இடங்களுக்கு அழைத்து சென்றார். ஆனாலும் பெண்ணின் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லாமலேயே இருந்தார். என்ன செய்தாலும் மனைவியின் மனதில் இருக்கும் சோகத்தை அறியாமல் கணவர் தவித்துக் கொண்டு இருந்தார்.

  இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி புதுப்பெண்ணின் காதலன் துபாயில் இருந்து ஊர் திரும்பினார். அவர் தனது காதலிக்கு திருமணம் நடந்ததை தெரியாமல் ஏராளமான பரிசு பொருட்களுடன் அவரை பார்க்க வீட்டுக்கு சென்றார். அங்கு சென்றபோதுதான் காதலிக்கு திருமணமான விவரம் தெரிந்தது. நொறுங்கிபோன காதலன் பெண்ணின் பெற்றோரிடம் காதலியின் செல்போன் எண்ணை வாங்கி பேசினார். அப்போது காதலியை தொடர்பு கொண்டு பேசிய அவர் ஏன் என்னை ஏமாற்றினாய் என்று தழுதழுத்த குரலில் கேட்டார். காதலன் திரும்பி வந்த சந்தோ‌ஷத்திலும், என்ன செய்வது என்று தெரியாமலும் புதுப்பெண் மவுனமாக இருந்தார். தொடர்ந்து பேசிய காதலி, நீ என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். நான் சொல்வதை நீ கேள். இன்று இரவு நான் உனக்காக காத்திருக்கிறேன். உடனே நீ என்னை வந்துபார் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். காதலியின் கணவர் வீட்டின் முகவரியை கண்டுபிடித்து காதலன் அங்கே சென்றார்.

  அப்போது இளம்பெண் திருமணத்தின் போது கொண்டு சென்ற நகை, லட்சக்கணக்கான பணம் ஆகியவற்றுடன் தயாராக இருந்தார். பெட்டி, படுக்கையுடன் தயாராக இருந்த காதலியை பார்த்து அதிர்ச்சியடைந்தார். நேசித்தவரோடு வாழ முடியாத கொடுமையை நான் ஒரு மாதம் அனுபவித்து விட்டேன். உடனே என்னுடன் வா என்று கூறி காதலனை அழைத்துச்சென்றார். எங்கே அழைத்துச் செல்கிறார் என்று தெரியாமல் காதலன் அவர் கூடவே சென்றார்.


  காதலனை அழைத்துக்கொண்டு வடகரையில் உள்ள அந்த பெண் நீதிபதியின் வீட்டிற்கு சென்று சரணடைந்தார். தான் காதலன் கூடத்தான் வாழ்வேன். எங்களை சேர்த்து வையுங்கள் என்று கூறி அழுதார்.

  விபரம் அறிந்த நீதிபதி நாதாபுரம் போலீசாரை தொடர்பு கொண்டு இந்த பெண் யாருடன் வாழ்கிறேன் என்று கூறுகிறாரோ? அவருடன் சேர்த்து வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் நிலையத்திற்கு காதலனுடன் சென்ற பெண் நடந்தவற்றை கூறினார். தனக்கு நடந்த திருமணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். நான் காதலனுடன் செல்கிறேன் என்று கூறினார். இதனையடுத்து போலீசாரிடம் எனது திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். காதலனை எனது கணவராக ஏற்றுக்கொள்கிறேன். எங்களை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று எழுதி கொடுத்தார். அப்போது கணவர் அங்கு வந்தார். நடப்பது என்னவென்று தெரிவதற்குள் எல்லாம் முடிந்து விட்டதால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.

  இது குறித்து மாப்பிள்ளை தரப்பில் கூறும்போது, திருமணத்திற்கு முன்பே இதை கூறியிருந்தால் எங்கள் மகனுக்கு இந்த நிலை வந்திருக்காது. திருமணமான ஒரு மாதத்தில் திருமண ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த முன்னாள் கணவர் காதலித்தவரை கைபிடிப்பது தான் சரி. கடமைக்கு என்னுடன் வாழ்வதை விட முன்னாள் மனைவி எடுத்த முடிவு சரியானதே என்று கூறி வாழ்த்தி அனுப்பினார்.
  Next Story
  ×