search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்கிம் எல்லையில் இந்திய - சீன படைகள் வாபஸ்: பூடான் வரவேற்பு
    X

    சிக்கிம் எல்லையில் இந்திய - சீன படைகள் வாபஸ்: பூடான் வரவேற்பு

    சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதாக இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்ட முடிவிற்கு பூடான் நாடு வரவேற்று உள்ளது.
    புதுடெல்லி:

    சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் இந்தியாவும், சீனாவும் படைகளை குவித்ததால் 70 நாட்களுக்கும் மேலாக போர் பதற்றம் நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரு நாடுகளும் டோக்லாம் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது என ஒப்புக்கொண்டன. இதையடுத்து இரு தரப்பிலும் படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகிறது. இந்தியாவும், சீனாவும் எடுத்துள்ள இந்த முடிவை பூடான் நாடு வரவேற்று உள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “டோக்லாம் பகுதியில் மோதல் போக்கை கைவிட்டு இரு நாடுகளும் படைகளை திரும்ப பெறுவதற்கு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை பூடான் வரவேற்கிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைதி ஏற்படும் என்று நம்புகிறோம்“ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×