என் மலர்

    செய்திகள்

    சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் - நிதி ஆயோக் பரிந்துரை
    X

    சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் - நிதி ஆயோக் பரிந்துரை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையிலும், அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போதிய வசதிகள் இல்லாத காரணங்களால் கடந்த 2010- 2014 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக குறைந்து விட்டதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில் தனியார்
    பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×