என் மலர்

    செய்திகள்

    மான நஷ்ட வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்
    X

    மான நஷ்ட வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மத்திய மந்திரி அருண் ஜெட்லி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியதாகவும், இதற்கு நஷ்ட ஈடு கோரியும் மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி அருண் ஜெட்லி டெல்லி ஐகோர்ட்டில் இரு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

    இதில் ஒரு வழக்கில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானதும் அவருக்கு அளிக்க வேண்டிய சம்பளத் தொகையை டெல்லி அரசு நிதியில் இருந்து வழங்க அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டதும் முன்னர் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.



    இரண்டாவது வழக்கில் அருண் ஜெட்லியின் குற்றச்சாட்டுக்கு உரிய பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்த டெல்லி ஐகோர்ட் அதற்கான இறுதி கெடுவையும் விதித்திருந்தது. ஆனால், அந்த கெடு தேதிக்குள் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

    எனவே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×