என் மலர்

  செய்திகள்

  ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவோம்: அமித் ஷா
  X

  ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவோம்: அமித் ஷா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்று வருகிற ஜூலை மாதம் 25-ந்தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

  பா.ஜ.க.வில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மற்றும் ஜார்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி மர்மு உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. இந்துத்துவா தலைவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ.க. நியமித்தால், வலுவான மதச்சார்பற்ற வேட்பாளரை களமிறங்குவது குறித்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆலோசித்து வருகின்றன.

  இந்நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் எதிக்கட்சிகளுடன் கருத்தொற்றுமை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்யுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

  இதற்கு பதிலளித்த அமித் ஷா, “ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை முடிவு செய்வதற்கு முன்பாக, எதிர்க்கட்சிகளுடன் பா.ஜ.க. ஆலோசனை நடத்தும். கருத்தொற்றுமை என்ற வார்த்தை பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் உள்பட ஒவ்வொரு கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவோம். தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொருத்தவரையில் யாருடைய பெயரையும் இதுவரை முடிவு செய்யவில்லை. முதலில் கூட்டணி கட்சிகளுடன் பேச உள்ளோம்” என்றார்.
  Next Story
  ×