என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி கார் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழப்பு: ராகுல் காந்தி இரங்கல்
    X

    டெல்லி கார் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழப்பு: ராகுல் காந்தி இரங்கல்

    • NIA அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
    • 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் குண்டுவெடிப்புச் செய்தி மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் அளிக்கிறது. இந்த துயர விபத்தில் பல அப்பாவி உயிர்களை இழந்தது மிகுந்த துயரத்தை அளிக்கிறது.

    இந்த துயரமான நேரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயருற்ற குடும்பத்தினருடன் நான் நிற்கிறேன். மேலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×