search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை
    X
    இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை

    சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததையொட்டி நாகூர் கடற்கரையில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை

    கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள இஸ்லாமியர்கள், நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ துவா செய்தனர்.
    சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் கொண்டாட்டம் நடைபெற்றது. ரம்ஜான் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஒரு மாத காலமாக நோன்பு நோற்று விரதமிருந்த இஸ்லாமியர்கள் மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து ஆரத்தழுவி கைகுலுக்கி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள இஸ்லாமியர்கள், நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ துவா செய்தனர்.
    Next Story
    ×