என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சியால்தான் புதுவைக்கு வளர்ச்சி- நாராயணசாமி தேர்தல் பிரசாரம்
    X

    காங்கிரஸ் கட்சியால்தான் புதுவைக்கு வளர்ச்சி- நாராயணசாமி தேர்தல் பிரசாரம்

    காங்கிரஸ் கட்சியால்தான் புதுவைக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியுள்ளார். #narayanasamy

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவு கேட்டு முத்தியால்பேட்டையில் இன்று பிரசாரம் நடந்தது.

    முத்தியால்பேட்டை காந்தி வீதி சாலைதெரு மார்க்கெட் சந்திப்பில் விநாயகர் கோவிலில் இருந்து திறந்த ஜீப்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வேட்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்தனர்.

    பிரச்சாரத்தின்போது முதல்அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    2011 முதல் 2016 வரை என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அந்த ஆட்சியில் புதுவைக்கு எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்பதை நன்கு உணர்ந்து என்.ஆர். காங்கிரசை வீட்டிற்கு அனுப்பினர். ஆனால் 3 ஆண்டு மோடியின் தொல்லை. கிரண்பேடியின் இடர்பாடுகள். எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதையும் மீறி நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

    காங்கிரஸ் கட்சியால்தான் புதுவைக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ. ஆயிரத்து 580 கோடி நிதி பெற்றுள்ளோம். குடிநீர் திட்டத்திற்கு ரூ.500 கோடி, கல்வி, மருத்துவம் என மத்திய அரசிடம் போராடி பல திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். மிக்சி, கிரைண்டர் தரமில் லாததை கொடுத்தனர். இதற்கு ரூ.100 கோடி செலவு செய்தனர். இதில் ஊழல் நடந்துள்ளது. மக்களுக்கு பயனில்லாத ஆட்சி நடத்தினர்.

    மோடி வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் விரோதி. அவரோடு சந்தர்ப்ப வாத கூட்டணி அமைத்து அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

    மதச்சார்பற்ற அணி ஆட்சிக்கு வந்தால்தான் ராகுல் பிரதமராக முடியும். வைத்திலிங்கம் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவார். கூடுதலாக நிதி பெற்றுத்தருவார். முத்தியால் பேட்டை மார்க்கெட்டை காங்கிரஸ்தான் கட்டி முடித்தது. மருத்துவ கல்லூரி, மகளிர், குழந்தைகள் மருத்துவ மனை என பல திட்டங்களை நாங்கள்தான் கட்டி முடித் தோம். யார் ஆட்சிக்கு வந்தால் புதுவை மாநில வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து கை சின்னத்திற்கு வாக்களித்து வைத்திலிங்கத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #narayanasamy 

    Next Story
    ×