என் மலர்

  செய்திகள்

  ஓசூரில் புகழேந்தி, நெல்லையில் மைக்கேல் ராயப்பன் போட்டி- டிடிவி தினகரன்
  X

  ஓசூரில் புகழேந்தி, நெல்லையில் மைக்கேல் ராயப்பன் போட்டி- டிடிவி தினகரன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஓசூரில் புகழேந்தியும், நெல்லையில் மைக்கேல் ராயப்பனும் போட்டியிடுவார்கள் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். #LSPolls #AMMK #TTVDhinakaran
  சென்னை:

  தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சி 38 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது.

  அ.ம.மு.க. சார்பில் பாராளுமன்ற தொகுதிக்கு 36 வேட்பாளர்களும் கூட்டணி கட்சியான எஸ்.பி.டி.ஐ. சார்பில் ஒரு வேட்பாளரும் போட்டியிடுகிறார்கள். 17 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  ஓசூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.  ஓசூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக கட்சியின் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், கர்நாடக மாநில அ.ம.மு.க.வின் செயலாளருமான வி.புகழேந்தி போட்டியிடுவார் என்று டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பிறந்த இவர் ஓசூரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் கர்நாடக மாநில ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தார். தினகரன் தீவிர ஆதரவாளரான இவர் தற்போது அ.ம.மு.க.வில் உள்ளார்.

  ஓசூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த பாலகிருஷ்ணரெட்டி வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தார். இதனால் இந்த தொகுதி காலியானது. தற்போது இங்கு அ.தி.மு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் சத்யா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

  திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக ஆர்.ஞான அருள்மணி அறிவிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதிலாக கட்சியின் அம்மா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் ராயப்பன் அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  புதுச்சேரி மாநில அ.ம.மு.க. இளைஞர் அணி செயலாளர் என்.தமிழ்மாறன் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். #LSPolls #AMMK #TTVDhinakaran
  Next Story
  ×