என் மலர்
உள்ளூர் செய்திகள்

போத்தனூரில் போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை
- கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது
- விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.
குனியமுத்தூர்,
கோவை போத்தனூர் அருகே வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் விக்னேஷ் (30). ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அய்யம்மாள் (25).
விக்னேஷ் குடிப்பழக்கம் உள்ளவர் என தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 20-ந் தேதி அய்யம்மாள் மகளிர் போலீசில் விக்னேஷ் மீது புகார் செய்தார். போலீசார் விக்னேஷை அழைத்து சமரசம் பேசினர்.
சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. உடனே அய்யம்மாள் தனது தம்பியை அழைத்துக் கொண்டு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். இதனால் பயந்து போன விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார். அய்யம்மாள் திரும்பி வந்த போது விக்னேஷ் தூக்கில் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






