என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    X

    தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    • கீழவாசல் எஸ்.என்.எம். நகரில் உள்ள இடத்திற்கு சென்று மது அருந்தி போதை அதிகமாகி கிடந்தார்.
    • புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அருணை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் அய்யமபேட்டையை சேர்ந்தவர் சதாம்உசேன் (வயது 24). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்தார்.

    பின்னர் ஒரு டாஸ்மாக்கில் மது வாங்கினார்.

    அப்போது தஞ்சையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நாகையை சேர்ந்த அருண் (25) என்பவரும் அதே கடையில் மது வாங்கினார்.

    அப்போது இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கீழவாசல் எஸ்.என்.எம். நகரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்திதுக்கு சென்று மது அருந்தினர்.

    இதில் சதாம்உசேன் போதை அதிகமாகி கிடந்தார்.

    இதனை பயன்படுத்திய அருண், மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு தப்பினார்.

    போதை தெளிந்ததும் சதாம் உசேன் தனது மோட்டார் சைக்கிளை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் மோட்டார் சைக்கிளை அருண் திருடியது தெரியவந்தது.

    இது பற்றி சதாம் உசேன் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அருணை கைது செய்தனர்.

    Next Story
    ×