என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆறுமுகநேரியில் பணம் திருடிய வாலிபர் கைது
  X

  ஆறுமுகநேரியில் பணம் திருடிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீமன் ஐஸ் விற்ற பணத்தை படுக்கையறை ஜன்னல் அருகே வைத்துள்ளார்.
  • சக்திவேல் பணத்தையும், செல்போனையும் எடுத்துவிட்டு ஓடினார்

  ஆறுமுகநேரி:

  ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தில் குடும்பத்தோடு வசிப்பவர் வீமன். ஐஸ் வியாபாரி. நேற்று முன்தினம் இவர் ஐஸ் விற்ற பணத்தை படுக்கையறை ஜன்னல் அருகே வைத்துள்ளார். பின்னர் இரவில் தூங்கிவிட்டார்.

  அப்போது ஜன்னலுக்கு வெளியே சத்தம் கேட்டு பார்த்தபோது பாரதி நகரை சேர்ந்த விமல்சேகர் மகன் சக்திவேல் என்பவர் ஜன்னல் வழியாக கையை விட்டு ரூ.3 ஆயிரத்து 500-யையும், செல்போனையும் எடுத்து ஓடி சென்றுள்ளார்.

  இதன் பின்னர் வீமன் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தனது வீட்டில் திருடிய சக்திவேலை பிடித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

  இதனிடையே சக்திவேலும் போலீசில் ஒரு புகார் செய்துள்ளார். இதில் வீமனும் அவரது மகன் ஆத்திமுத்து மற்றும் பிரபு, ஜெயபிரகாஷ் ஆகியோரும் சேர்ந்து தன்னை கட்டி வைத்து தாக்கியதாக கூறியுள்ளார்.

  இதன் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×