என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
- திட்டை மாரியம்மன் கோவில் குளம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
- சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை விளார் ரோடு பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40) தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது நண்பர் பாண்டியன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து அம்மன்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தஞ்சை அடுத்த திட்டை மாரியம்மன் கோவில் குளம் அருகே சென்ற போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் செந்தில்குமார், பாண்டியன் ஆகிய இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அவர்களை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் இறந்தார்.
பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






