என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே தொழிலாளி தற்கொலை
    X

    பொள்ளாச்சி அருகே தொழிலாளி தற்கொலை

    • தன்னை யாரோ கூப்பிடுவதாகவும், விரைவில் இறந்து விடுவேன் எனவும் அடிக்கடி புலம்பி வந்தார்
    • சித்தப்பா வீட்டில் தூக்கில் தொங்கினார்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). கூலித் தொழி லாளி. இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தனியாக வசித்த மணிகண்டன் அடிக்கடி தன்னை யாரோ கூப்பிடுவதாகவும், தான் விரைவில் இறந்து விடுவேன் என தனக்கு தானே அடிக்கடி புலம்பி வந்தார்.

    சம்பவத்தன்று இவர் அருகே உள்ள சித்தப்பா மாரிமுத்து என்பவரது வீட்டிற்கு இரவு தூங்க சென்றார். நள்ளிரவு திடீரென மணிகண்டன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது சித்தப்பா அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×