என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூலைக்கரைப்பட்டி அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
- நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் கழுவூர் காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். தொழிலாளி.
- சம்பவத்தன்றும் மது போதையில் வந்த தமிழ்செல்வனை, சாந்தி கண்டித்ததால் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் கழுவூர் காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். தொழிலாளி. இவருக்கும், இட்டமொழி அம்பேத்கர் காலனியை சேர்ந்த சாந்திக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தமிழ் செல்வன் அடிக்கடி மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்ததால் அவர்களுக்கிடைேய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் மது போதையில் வந்த தமிழ்செல்வனை, சாந்தி கண்டித்ததால் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சாந்தி கோபித்து கொண்டு இட்டமொழியில் உள்ள தனது தயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த தமிழ்செல்வன் வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தமிழ்செல்வனின் தந்தை மாணிக்கம் விஜய நாராயணம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






