என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி கோவில் கொடை விழாவில் கனமழை வேண்டி பெண்கள் வழிபாடு
    X

    சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.

    உடன்குடி கோவில் கொடை விழாவில் கனமழை வேண்டி பெண்கள் வழிபாடு

    • விவசாயம் செழிக்க வேண்டி பாடல்கள் பாடி பெண்கள் கலந்து கொண்ட 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • விழாவில் அம்பாள் பூ ஆலங்கார சப்பரத்தில் பவனி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி வைத்தி லிங்கபுரம் உச்சினி மாகாளி அம்பாள், பட்டரை அம்பாள் கோவில் வருடாந்திர கொடை விழா 7-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் நாட்டின் நல்ல கனமழை பொழிந்து பூமி செழிக்க வேண்டியும், உடன்குடி பகுதியில் உள்ள குளம், குட்டைகள் முழுமையாக நிரம்பி நிலத்தடி நீரை பாதுகாத்து விவசாயம் செழிக்க வேண்டி பாடல்கள் பாடி பெண்கள் கலந்து கொண்ட 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து மோகனசுந்தரம் சமயச் சொற்பொழிவு, அம்பாளுக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, அம்பாள் திருக்கும்பத்தில் பவனி, உடன்குடி கீழ பஜார் கண்டுகொண்ட விநாயகர் ஆலயத்தில் இருந்து மேளதாளம், வாண வேடிக்கையுடன் பஜார் வழியாக பால்குட பவனி, அம்பாளுக்கு வெள்ளி அங்கி அணிதல், அலங்காரத்துடன் மகாதீபாராதனை, பெண்கள் காணிக்கை, நியமனங்கள் செலுத்துதல், அம்பாள் பூ ஆலங்கார சப்பரத்தில் பவனி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் காலையில் பொங்கல் வைத்தல், அம்பாள் திருக்கு ம்பத்தில் மஞ்சள் நீராடுதல், வரிபிரசாதம் வழங்கல் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×