கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இலவச மனை பட்டா கேட்டு மனு அளித்த பெண்கள்

பரங்கிப்பேட்டை பகுதி மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.
பரங்கிப்பேட்டை பகுதி மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.
Published on

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அந்த மனுவில், பரங்கிப்பேட்டை பகுதியில் சந்தை கடை தெரு மற்றும் குமரக்கோயில் தெற்கு தெரு பகுதியில் 40 ஆண்டு காலமாக வசித்து வருகின்றோம்.

எங்களுக்கு சொந்த வீட்டு மனை இல்லாமல் தெருக்களில் வசித்து வருகின்றோம். மேலும் கூலி வேலை செய்து வருவதால் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றோம்.இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தி லும், குடிசை மாற்று வாரியத்திலும், வருவாய் துறை அலுவலகத்திலும் மனு அளித்தும் பலனில்லை.ஆகையால் தமிழக முதல மைச்சரால் வீட்டு மனை மற்றும் வீடு இல்லாத வர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com