என் மலர்
உள்ளூர் செய்திகள்

மளிகை கடையில் குட்கா விற்ற பெண் கைது
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக அன்ன தானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதையடுத்து குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து போலீசார், நிர்மலாவை கைது செய்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப் பட்டி, சங்ககிரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா ( வயது 53). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், பான் மசாலா, உள்ளிட்ட குட்கா போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக அன்ன தானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். இதில் அந்த கடையில் குட்கா பொருட்களை விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து போலீசார், நிர்மலாவை கைது செய்த னர்.
Next Story