என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடன்குடி வாரச்சந்தையை படத்தில் காணலாம்.
உடன்குடி வாரச்சந்தையில் நிரந்தர கடைகள் விரைந்து அமைக்கப்படுமா? - வியாபாரிகள் கோரிக்கை
- உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பையொட்டி சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் திங்கள் கிழமை தோறும் செயல்படும் வார சந்தை வளாகம் உள்ளது.
- வார சந்தையை புதியதாக அமைக்க அனைத்து கொட்டகைகள், கட்டிடங்கள், கடைகளைஎல்லாம் முழுமையாக இடிக்கப்பட்டது
உடன்குடி:
உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பை யொட்டி சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் திங்கள் கிழமை தோறும் செயல்படும் வார சந்தை வளாகம் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய வாரச்சந்தை யான இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரும் வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள்.
சுற்றுப்புறப் பகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இங்கு வாங்கி செல்வார்கள்.
தென்னை, வாழை, தேங்காய் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக கொண்டு வந்து வியாபாரம் செய்வார்கள்.
ஆடு, கோழி போன்றவற்றை வளர்த்து இங்கு கொண்டு வந்துவிற்பனை செய்வார்கள். இந்த வார சந்தையை புதியதாக அமைக்க அனைத்து கொட்டகைகள், கட்டிடங்கள், கடைகளைஎல்லாம் முழுமையாக இடிக்கப்பட்டது. ஆனால் 6 மாதமாக எந்த பணியும் தொடங்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இங்கே கடை நடத்தும் வியாபாரிகள் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் என அனைத்து மக்களும் வெயிலிலும். மழையிலும் கடும் அவதிப்படுகின்றனர். உடனடியாக நிரந்தர கடைகளை கட்டி இந்த வாரச் சந்தையை அழகு படுத்த வேண்டும் என்று. வியாபாரிகளும், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறுவசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்புமக்கள்ளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






