search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டு யானைகள் அட்டகாசம்-யானைகளை வனத்துக்குள் அனுப்ப வனத்துறையினர் முகாம்
    X

    வாழைகள் சேதம் அடைந்து கிடக்கும் காட்சி.

    காட்டு யானைகள் அட்டகாசம்-யானைகளை வனத்துக்குள் அனுப்ப வனத்துறையினர் முகாம்

    • காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, சோலார்மின் வேலி, பாதுகாப்பு வேலி, ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளது.
    • அதிகாலை 6 மணி வரை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் நிற்பதால் விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது என விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாறு மற்றும் சின்னாறு பகுதிகளில் பல ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளது.

    அதில் விவசாயிகள் தென்னை, வாழை, மா, நெற்பயிர்கள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வப்போது காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு கடையநல்லூர் பீட் கல்லாறு காட்டுப்பகுதிகளில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, சோலார்மின் வேலி, பாதுகாப்பு வேலி, ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளது. அதிகாலை ஆறு மணி வரை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் நிற்பதால் விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது என விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

    நேற்று இரவு கடையநல்லூர் வன ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கடையநல்லூர் பீட் வனவர் முருகேசன் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் விவசாயிகள் அங்கேயே முகாமிட்டு யானைகளை, வெடிவைத்து, சைரன் ஒலித்து இரவுபகலாக வனத்துக்குள் யானைகளை விரட்ட முகாமிட்டுள்ளனர்.

    எனவே கல்லாறு வனப் பகுதிகளில் அதிக அளவு யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் குளிப்பதற்கு மேற்கு தொடர்ச்சி மலை அருகே உள்ள கல்லாறு பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என கடையநல்லூர் வன ரேஞ்சர் சுரேஷ் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×