search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் போதைப் பொருள் விற்பனையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பேட்டி
    X

    கோவையில் போதைப் பொருள் விற்பனையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பேட்டி

    • 660.176 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • பள்ளிக்கூடம் 2.0 ப்ராஜெக்ட் திட்டம் மூலம் 46,884 மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காணாமல் போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கலந்து கொண்டு, காணாமல் போன ரூ.39 லட்சத்து 42 ஆயிரத்து 500 மதிப்பிலான 200 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 519 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது வரை 8 ஆயிரத்து 543 குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    34 கொலை வழக்குகளில் 60 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 660.176 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, ரூ.70,00,260 ஆகும். இதில் ரூ.33 லட்சம் மதிப்பில் போதை சாக்லேட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    திருட்டு தொடர்பாக 569 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 415 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ..4,78,07,140 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 153 பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 134 வழக்குகளுக்கு முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டு 10 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

    பள்ளிக்கூடம் 2.0 ப்ராஜெக்ட் திட்டம் மூலம் 46,884 மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 687 பள்ளிகளில் இதுவரை 1302 விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 10 பள்ளிகளில் மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இதுகுறித்து பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×