கார் மோதி வாட்ச்மேன் பலி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஒசுவக்காடு பகுதியில் கார் மோதி வாட்ச்மேன் பலியானார்.நேற்று காலை 6 மணியளவில் பங்க் எதிரே வேலை முடிந்து சாலையை கடந்தார்.
கார் மோதி வாட்ச்மேன் பலி
Published on

குமாரபாளையம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஒசுவக்காடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இரவு நேர வாட்ச்மேனாக பணியாற்று வந்தார். நேற்று காலை 6 மணியளவில் பங்க் எதிரே வேலை முடிந்து சாலையை கடந்தார்.

அப்போது வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் அண்ணா துரை பரிதாபமாக இறந்தார். அப்போது சாலையின் மறுபக்கம் இவரது மகன் சுரேஷ், (30), இந்த சம்பவத்தை கண்டு கதறி அழுதார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் ஓட்டிவந்த சேலத்தை சேர்ந்த டாக்டர் மணிகண்டபிரபுவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com