என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கர்ப்பமான 16 வயது சிறுமி
- திருத்தங்கல்லில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் 16 வயது சிறுமி கர்ப்பமானார்.
- இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்து வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் அந்த சிறுமிைய தேராம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றார்.
இந்த நிலையில் சிறுமிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் சிறுமியை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில் அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த டாக்டர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருத்தங்கல் சத்யா நகரைச் சேர்ந்த வைரமுத்து (வயது 22), பரமசிவம் (44) ஆகிய 2 பேர் 2 வருடங்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இதில் சிறுமி கர்ப்பமானது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.