search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்-அமைச்சர்
    X

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அருகில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., கலெக்டர் ஜெயசீலன் உள்ளனர்.

    குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்-அமைச்சர்

    • விருதுநகர் மாவட்டத்தை குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேசினார்.
    • குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி களிலும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், பொதுமக்க ளுக்கு குடிநீர் வழங்கும் பணி தான் அரசின் முதன்மையான பணியாகும். ஆகவே அதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும். அதற்கு தேவை யான நிதி பெற்று தரப்படும்.மேலும் விருதுநகர் மாவட் டம் குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றார்.

    தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ராஜபாளையம் நகராட்சி யில் 1 முதல் 21 வார்டு பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையும் 22 முதல் 42 வார்டு பகுதி களில் 10 முதல் 15 நாட்க ளுக்கு ஒரு முறையும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனை சரி செய்து 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் கேட்கின்றனர். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட வேண்டும். பேரூராட்சி மற்றும் ஊராட்சி கிராம பகுதிகளிலும் முறையாக குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய இதுபோல் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர், கண்டிப்பாக கிராம பகுதிகளிலும் முறை யாக குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தார்.

    கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சேர்மன்கள், கமிஷனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×