என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வாலிபர்-கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
  X

  வாலிபர்-கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாலிபர்-கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  ராஜபாளையம்

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவாரம்பட்டி சிந்தாமணி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 36). இவர் குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷ பவுடரை கரைத்து குடித்து மயங்கிக் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாலசுப்பிர மணியம் மனைவி சங்கரேஸ்வரி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  வாலிபர்

  ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மவுண்ட் சீயோன் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ஈஸ்வரன் (26). வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த இவரை அரசுத் தேர்வு பயிற்சி வகுப்புக்கு செல்லுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஈஸ்வரனின் உறவினர் மாரியப்பன் தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×