என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாணவர்-தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
  X

  மாணவர்-தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவகாசி அருகே பள்ளி மாணவர், தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
  • வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சிவகாசி

  சிவகாசி வெல்லம்சா மியார் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீமுருகன். இவரது மகன் ஸ்ரீராம் கார்த்திகேயன் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர்ச்சி முடிவுகள் வெளியானது.

  இதில் ஸ்ரீராம் கார்த்திகேயன் தோல்வியடைந்ததாக தெரிகிறது. இதனால் அவர் விரக்தியுடன் காணப்பட்டார்.

  இந்த நிலையில் ஸ்ரீமுருகன் தனது மகனை அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் சேர்த்தார்.

  தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து யாருடனும் சரியாக பேசாமல் இருந்த ஸ்ரீராம் கார்த்திகேயன் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (32). கட்டிட தொழிலாளியான இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் மனைவியுடன் பிரச்சினை ஏற்பட்டது.

  சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட, வினோத்குமார் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் வினோத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×