search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்கன்று நடும் நிகழ்ச்சி
    X

    மரக்கன்று நடும் நிகழ்ச்சி

    • மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • நகர்மன்றத்தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்று மரங்களை நட்டு தூய்மை பணிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் 32-வது வார்டு மடவார்வளாகத்தில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் ''என் குப்பை என் பொறுப்பு'' நிகழ்ச்சி நடந்தது.

    நகர்மன்றத்தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்று மரங்களை நட்டு தூய்மை பணிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் பேசிய நகர்மன்றத் தலைவர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களும் நகராட்சியுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.

    வீதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை சேகரிக்காமல் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்வில் நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஐமாணிக்கம், சுகாதார ஆய்வாளர் சந்திரா,கவுன்சிலர் சுரேஷ் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள், தூய்மை பாரத இயக்க குழுவினர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×