search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை மீட்டெடுக்க கோரிக்கை
    X

    ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகம்.

    ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை மீட்டெடுக்க கோரிக்கை

    • நலிவடைந்த நிலையில் உள்ள ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பல ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சங்கமாகும்.

    ஏ.கே.டி.பலராமராஜா தனது வீட்டையே சங்கத்திற்காக வழங்கி முதல் தலைவரானார். இந்த சங்கத்தில் திறமையான அதிகாரிகள், திறமையான தலைவர்கள் இருந்த காலத்தில் தினமும் 15 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து ராஜ பாளையம் மக்களுக்கு விநியோகித்து வந்தனர்.

    இந்த சங்கம் விருதுநகர் மாவட்டத்திலேயே முதல் கூட்டுறவு சங்கமாக தேர்ந்தெடுத்து பல பரிசுகள் வென்றுள்ளது.

    திறமை வாய்ந்த அதிகாரி களுக்கு பின்னர் நிர்வாக திறமையின்மையின் காரணமாகவும், தலைவர்களாக வந்தவர்களும் முன்னேற்ற வேண்டும் என்ற நிலையில் இல்லாமல் அதிகமான ஊழியர்களை லஞ்சம் பெற்று பணி அமர்த்தினர்.

    பால் உற்பத்தி யாளர்களிடம் முறையாக பேச்சுவார்த்தை, போனஸ், கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்தது போன்ற காரணங்களால் தற்போது தினமும் 8 ஆயிரம் லிட்டருக்கும் குறைவாகவேப பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தேவிபட்டினம் கிராமத்தில் இருந்து வரவேண்டிய தினமும் 3 ஆயிரம் லிட்டர் பால் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இவர்களது கூட்டுறவு சங்கத்தில் இருந்து பெறப்படும் பாலுக்கு சரியான விலை உயர்வு கொடுக்காமல் இருந்ததால் தனியார் பால் நிறுவனங்கள் தேவிபட்டினம் முழுவதும் அதிக விலைக்கு பால் வாங்கி வருவதால் 3 ஆயிரம் லிட்டர் பாலையும் கூட்டுறவு சங்கம் இழந்தது. தற்போது மாடு வளர்ப்ப தற்கான ஆர்வமும் மக்களி டையே இல்லாத நிலையில் பால் உற்பத்தி குறைந்து வருவதும் ஒரு காரணமாகும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பால் ஒரு முக்கியமான உணவு பொருளாக அமைந்து விட்டதால் தரம் வாய்ந்த கூட்டுறவு சங்க பாலுக்கு எப்பவுமே கிராக்கி இருந்து வருகிறது.

    இந்த நிலையில் பால் கிடைக்காத நிலையில் தனியார் பால் விற்பனை யாளர்களிடம் பொதுமக்கள் பால் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு கடந்த பல வருட காலமாக தள்ளாடிய நிலையில் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இருந்து வருகிறது.

    தேவையில்லாத ஊழியர்கள் நியமனம், தேவையில்லாத செலவு, கூட்டுறவுத்துறை மேல திகாரிகளின் அலட்சியப் போக்கு போன்றவைகளால் நிர்வாக திறன் பாதிக்கப்பட்டு பல ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

    அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக பல ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு படிப்படியாக பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதிகாலை 5.30 மணிக்கு வர வேண்டிய பால் தற்போது 6 மணிக்கு மேல் 7 மணி வரை விநியோகம் செய்யும் நிலையில் இருந்து வருகிறது.

    இதன் காரணமாக மாதந்தோறும் முன்கூட்டியே பணம் செலுத்தி பால் அட்டை வாங்கும் நிலை தற்போது குறைந்து விட்டது. தனியார் விற்பனை யாளர்களிடம் பால் பெறும் நிலை இருந்து வருகிறது.

    எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள பால் வளத்துறை அமைச்சர், ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க விஷயத்தில் கவனம் செலுத்தி நலிவடைந்த நிலையில் உள்ள சங்கத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பால் உற்பத்தியாளர்கள் சங்க ஊழியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×