என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு
- பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜோதி(வயது35). அவரது சொந்த ஊரான பழைய சென்னாகுளத்தில் வீடு மற்றும் நிலங்கள் உள்ளது. இந்தநிலையில் வீடு இடிந்து அதில் இருந்த தேக்கு கட்டைகளை சிலர் திருடிச் சென்று விட்டதாக உறவினர் ஒருவர் ஜோதிக்கு போனில் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஜோதி அங்கு சென்று பார்த்தபோது தேக்கு கட்டைகள் திருடப் பட்டது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த கதிரேசன், முருகே சன் மற்றும் சிலர் தேக்கு கட்டைகளை திருடிச் சென்றதாக தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீவில்லி புத்தூர் கோர்ட்டில் ஜோதி வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஜோதி தனது கணவருடன் விசா ரணைக்கு சென்றுவிட்டு வரும்போது முருகேசனும், அவரது நண்பர்களும் அவர்களை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு சொந்தமான வாழை தோப்பையும் அவர்கள் சேதப்படுத்தி யுள்ளனர்.
இதுகுறித்தும் ஜோதி வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் கதிரேசன், முருகேசன், மோகன், ஜெயராஜ் உள்ளிட் டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.






