search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டி
    X

    பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவிகள் பிரிஸ்கில்லா மெர்லின், ஜீவகிருத்திகா ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி பரிசு வழங்கினார்.

    போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டி

    • போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
    • அவர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் சாத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் வழிகாட்டுதலின்படி கோட்ட அளவிலான போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருள் விளைவுகள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கிடையே போட்டிகள் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    இதில் விளக்க காட்சி வழங்குதல், கதை எழுதுதல், கவிதை கூறுதல், சுவரொட்டி தயாரித்தல் மற்றும் ரங்கோலி கோலப்போட்டி ஆகிய போட்டிகள் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்தது. விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 25 பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை கல்லூரிகளை சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர்.

    ரங்கோலி கோல ேபாட்டியில் 23 அணிகள் பங்கேற்று, '' போதையில்லாத உலகம், போதையில்லாத பாதை'' போன்ற

    கருத்துகளை கோலங்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.

    பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனுவியல் பொறியியல் துறையின் 3-ம் ஆண்டு மாணவிகள் பிரிஸ்கில்லா மெர்வின், ஜீவ கிருத்திகா ஆகியோர் ரங்கோலி போட்டியில் 2-ம் பரிசு பெற்றனர். விருதுநகரில் நடந்த 75-வது சுதந்திர தினவிழாவின் போதுகலெக்டர் மேகநாத ரெட்டி, வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

    வெற்றி பெற்ற மாணவிகளை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, மின்னியல் மற்றும் மின்னனுவியல் பொறியியல் துறைத்தலைவர் முனிராஜ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×