என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசி பதுக்கி கைதான 4 பேர்.
12 டன் ரேசன் அரிசி பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது
- ராஜபாளையத்தில் 12 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதேபோல் ரேசனில் வழங்கப்படும் பருப்புகள், கோதுமை, எண்ணை போன்றவை வெளிமாநிலங்களுக்கு கடத்துவது சர்வசாதா ரணமாக நடந்து வருகிறது.
ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் ராஜபாளையம் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் பின்புறம் கிட்டங்கியில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஆல்வின் பிரிஜிஸ்மேரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக எஸ்.ராமலிங்காபுரத்தை சேர்ந்த வேல்முருகன்(வயது32), லோடுமேன்கள் கவுரி சங்கர்(24), ரவீந்திரன்(24), சரவணன்(21) ஆகிய 4பேரை போலீசார் கைது செய்தனர்.
பதுக்கி வைக்க ப்பட்டிருந்த ரேசன் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்க முயற்சித்தது விசாரணையில் தெரியவந்தது.






