என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உடன்குடி பகுதியில் இன்று மாலை இந்து மகாசபா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்
  X

  உடன்குடி பகுதியில் இன்று மாலை இந்து மகாசபா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடன்குடி ஓன்றியத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபா ஆகியவை சார்பில் 88 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து சிலைகளுக்கும் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜைகள், மாணவர்களுக்கான விநாயகர் அகவல் போட்டிகள், பரிசளிப்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

  உடன்குடி:

  உடன்குடி ஓன்றியத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபா ஆகியவை சார்பில் 88 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

  இந்து முன்னணி சார்பில் உடன்குடி மெயின் பஜார், பெருமாள்புரம், சந்தையடியூர், கொட்டங்காடு, தேரியூர், சிவல்விளைபுதூர், நடுக்காலன்குடியிருப்பு, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி உள்பட 48 இடங்களில் 4 அடி முதல் 8 அடி உயரமுடைய விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

  இந்நிகழ்ச்சிகளில் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் சுடலைமுத்து, ஓன்றிய தலைவர் செந்தில்செல்வம், நகர தலைவர் சித்திரைபெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து சிலைகளுக்கும் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜைகள், மாணவர்களுக்கான விநாயகர் அகவல் போட்டிகள், பரிசளிப்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

  நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு ஒவ்வொரு விநாயகர் சிலைகளும் ஒவ்வொரு வாகனத்தில் ஏற்றி உடன்குடி நகர பகுதியில் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு திருச்செந்தூர் கடலில் விசர்ஜனம் செய்யப்படும்.

  இன்னும் உடன்குடி ஒன்றிய பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்களுக்கு வீடு வீடாக குட்டி விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டு வீட்டில் வைத்து தினசரி காலையிலும் மாலையிலும் சிறப்பு வழிபாடுசெய்து வருகிறார்கள். வீடுகளில் உள்ள விநாயகர் சிலைகளும் 3-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

  இது தவிர இந்து மகாசபா சார்பில் உடன்குடி கீழபஜார், குலசேகரன்பட்டினம், பாரதிநகர், அனுகூலபுரம், விநாயகர்காலனி ஜெ.ஜெ.நகர், வில்லிகுடியிருப்பு, நங்கைமொழி உள்ளிட்ட 40 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினசரி காலையிலும், மாலையிலும் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிகழ்ச்சியில் இந்து மகாசபாமாநில செயலர் அய்யப்பன் உட்பட பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

  இந்த அமைப்பின் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் 500 பெண்கள் பங்கேற்கும் சிறு விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஆகியன உடன்குடியில் புறப்பட்டு வாகனங்களில் எடுத்து சென்று திருச்செந்தூர் கடற்கரையில் விசர்ஜனம் நடைபெறும். இதில் இந்து மகாசபா தேசிய துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச்செயலர் முத்தப்பா, உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

  Next Story
  ×