search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீரான குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

    • அலவந்தான்குளத்தை சேர்ந்த ஒருவர் அந்த கிணற்றில் தனி மோட்டார் அமைத்து அவரது கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்கிறார்.
    • வறட்சியான காலங்களில் வடக்கு பத்தினிப்பாறை கிராம பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் வந்து மனு கொடுத்தனர்.

    காலிக்குடங்களுடன் திரண்ட மக்கள்

    மானூர் யூனியன் பல்லிக்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட திருத்து கிராமத்தை சுமார் 500 பேர் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் வாசல் பகுதியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருந்ததாவது:-

    பல்லிக்கோட்டை பஞ்சாத்தில் அலவந்தான்கும், பல்லிக்கோட்டை, நெல்லை திருத்து ஆகிய 3 கிராமங்கள் உள்ளது. இவர்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 2004-ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் 3 கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அலவந்தான்குளத்தை சேர்ந்த ஒருவர் அந்த கிணற்றில் தனி மோட்டார் அமைத்து அவரது கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்கிறார். இதனால் மற்ற 2 கிராமத்தினர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    முனைஞ்சிப்பட்டி இந்திரா குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 20 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    நாங்குநேரி தாலுகா தோட்டாக்குடி பஞ்சாயத்து வடக்கு பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 2 சமூகத்தை சேர்ந்த 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். வறட்சியான காலங்களில் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதேபோல் பைப்லைன் அமைத்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே இரண்டு சமூகத்தினருக்கும் தனித்தனியாக தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என கூறியிருந்தனர்.

    Next Story
    ×