search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவலார்குளம் ஊராட்சியில் துணை தலைவர் தலைமையில் கிராமசபை கூட்டம்
    X

    சிவலார்குளம் ஊராட்சியில் துணை தலைவர் தலைமையில் கிராமசபை கூட்டம்

    • கிராமசபை கூட்டத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் கதிர்வேல் அதனை புறக்கணித்தார்.
    • ஏரி, குளங்களில் மரம் நட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவலார்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் கதிர்வேல், கிராமசபை கூட்டத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனால் கிராமசபை கூட்டத்திற்கு துணை தலைவர் கோவில்பாண்டி தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசாரதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் பழனி தீர்மானங்களை வாசித்தார்.

    கிராமத்தில் பசுமை வளங்களை அதிகரிக்க ஏரி, குளங்களில் மரம் நட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் குமுதா, முருகேஷ்வரி, வேலம்மாள், மேகனா செல்வி மற்றும் கிராமமக்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×