search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே கால்நடை மருத்துவ முகாம்
    X

    கயத்தாறு அருகே கால்நடை மருத்துவ முகாம்

    • முகாமில் மருத்துவர்கள் ராஜ்பாபு, ராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து சிறப்பாக வளர்க்கப்பட்ட கிடாரிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அதன் உரிமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே சவலாப்பேரி கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி கோட்டத்தின் கால்நடை உதவி மருத்துவர் விஜய்ஸ்ரீ முன்னிலை வகித்தார்.

    முகாமில் மருத்துவர்கள் ராஜ்பாபு, ராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதில் அப்பகுதியை சேர்ந்த 96 கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 10 கால்நடைகளுக்கு மலட்டு தன்மை நீக்குதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைத்து ஆடு, மாடுகளுக்கும் தடுப்பூசி மற்றும் தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. மேலும் குடற்புழு நீக்கம் உட்பட பல்வேறு சிகிச்சைகள் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக வளர்க்கப்பட்ட கிடாரிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அதன் உரிமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் ராஜ் பாபு, மற்றும் ராஜ், கால்நடை உதவியாளர்கள் செய்தி ருந்தனர்.

    Next Story
    ×