என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலைஞர்களுக்கு பல்வேறு கலை விருது, காசோலையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
15 கலைஞர்களுக்கு பல்வேறு கலை விருதுகள்; கலெக்டர் வழங்கினார்
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 375 மனுக்கள் பெறப்பட்டது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 375 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப் பட்ட அலுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 2021-22 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு விருது மற்றும் காசோலைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மண்டல கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






