search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் கிளை அஞ்சல் நிலையம்  தொடர்ந்து செயல்படவேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
    X

    வள்ளியூர் கிளை அஞ்சல் நிலையம் தொடர்ந்து செயல்படவேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

    • வள்ளியூர் பஸ் நிலையத்தில் கிளை அஞ்சல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது.
    • தொடர்ந்து பஸ் நிலையத்தின் அருகில் கிளை அஞ்சல் நிலையம் செயல்படவேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் பஸ் நிலையத்தில் கிளை அஞ்சல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த அஞ்சலகத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட பதிவு தபால், மணிஆர்டர் சேவைகள் செய்யப்பட்டு வந்தது. இது தவிர இந்த கிளை அஞ்சல் அலுவலகத்தில் 500-க்கும் அதிகமான சிறுசேமிப்பு கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தினமும் அஞ்சல் தலை விற்பனை உள்ளிட்ட அஞ்சலக பணிகள் நடைபெற்று வந்தது. பஸ் நிலையத்திற்குள் அஞ்சலகம் செயல்பட்டு வந்ததால் வெளியூர் பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு அதிக பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் வள்ளியூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனை அடுத்து பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த கடைகள், புறக்காவல் நிலையம், நூலகம், அஞ்சலகம் அனைத்தும் காலி செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டுள்ளது.

    இதில் கடை வியாபாரிகளுக்கு பஸ் நிலையத்தின் வெளிப் பகுதியில் சாலையை யொட்டி தற்காலிகமாக கடைகள் அமைத்து கொடுக்கப் பட்டு அதில் வியாபாரங்கள் நடந்து வருகிறது. கிளை அஞ்சல கத்திற்கும் தற்காலிக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அஞ்சல் பணியாளர்கள் இந்த தற்காலிக இடத்தில் செயல்படமுடியாது என கூறி கிளை அஞ்சலகத்தை வள்ளியூர் தலைமை அஞ்சல கத்துடன் இணைத்துவிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கு வள்ளியூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பஸ் நிலையத்தின் அருகில் கிளை அஞ்சல் நிலையம் செயல்படவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராதாபுரம் வட்டார செயலாளர் சேது ராமலிங்கம் பாளையங்கோட்டை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    வள்ளியூர் பஸ் நிலையத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கிளை அஞ்சல் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது பஸ் நிலையம் விரி வாக்கம் பணியை யொட்டி கிளை அஞ்சல் நிலையம் மூடப்பட்டு செயல்பட வில்லை. இதனால் இப்பகுதி யைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட பொது மக்கள், வியாபாரிகள், வெளியூர் பயணிகள் பாதிக்க ப்பட்டுள்ளனர். எனவே வள்ளியூர் பஸ் நிலையம் அருகிலேயே மாற்று இடத்தில் கிளை அஞ்சல் நிலையம் அமைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×