search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருப்பதற்கு தகுதி இல்லை: வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.
    X

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருப்பதற்கு தகுதி இல்லை: வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.

    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை விட்டு தனிக்கட்சி தொடங்கலாம்.
    • ‘மார்க்-3' என்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    தஞ்சாவூர் :

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் 'மார்க்-3' என்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த எந்திரம் தொடர்பாக அதன் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடன் கருத்து கேட்கும் வகையில் ஆலோசனை கூட்டம் ஒன்றை வருகிற 16-ந் தேதி தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது பெயரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி இருந்தார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தை அ.தி.மு.க. தலைமை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ''ஆவணங்கள் படி தமிழக தேர்தல் ஆணையம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தை திருப்பி அனுப்புகிறோம் என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அப்படி திருப்பி அனுப்பினால் அவர்கள்(எடப்பாடி பழனிசாமி) அ.தி.மு.க.வை விட்டு தனிக்கட்சி தொடங்கலாம். அ.தி.மு.க.வில் இருப்பதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×