search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி சுகாதார நிலையத்தை புதுப்பித்து கட்ட வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
    X

    கட்டிடத்தின் காங்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரிவதை படத்தில் காணலாம்.

    உடன்குடி சுகாதார நிலையத்தை புதுப்பித்து கட்ட வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

    • உடன்குடி வட்டார கல்வி அலுவலகம் எதிரே இந்த துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் கட்டிடத்தில் ஒவ்வொரு பகுதியாக இடிந்து வருகிறது.

    உடன்குடி:

    உடன்குடியில் கிறிஸ்தியாநகரம், புதுமனை, பரதர்தெரு, வில்லிகுடியிருப்பு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாக துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை சுகாதார நிலையம் உடன்குடி வட்டார கல்வி அலுவலகம் எதிரே செயல்பட்டு வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் அங்கு பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் தங்கியிருந்து பணியாற்றிட வேண்டும். இந்த செவிலியர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு சத்து மாத்திரை மற்றும் வீடுகள் தோறும் சென்று அவ்வப்போது சர்வே எடுப்பது, கர்ப்பிணி பெண்கள் குறித்து கணக்கெடுத்து தடுப்பூசி, மாத்திரை என குழந்தை உண்டானதில் இருந்து குழந்தை பிறந்து 6 மாதம் வரை தனிக்கவனம் செலுத்தி கவனிப்பது, மேலும் குடும்பகட்டுப்பாடு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வரும் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் கட்டிடத்தில் ஒவ்வொரு பகுதியாக இடிந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியம் திடீரென துணை சுகாதார நிலையத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. மேலும் கட்டிடத்தைச் சுற்றி மேல்பகுதி இடிந்தும், கீறல் விழுந்து பெயர்ந்தும், கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகளில் கான்கீரிட் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டும் இருக்கிறது. இதனால் துணை சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ளவர்கள் செல்ல அஞ்சவேண்டிய நிலையுள்ளது. எனவே இந்த கட்டிடத்தை புதுப்பித்து கட்ட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×