என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் லாரி மோதி மெக்கானிக் பலி
    X

    தூத்துக்குடியில் லாரி மோதி மெக்கானிக் பலி

    • தூத்துக்குடி முள்ளக்காடு வடக்குத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்ற காசிராம் ( வயது 31).
    • துறைமுகம் சாலை வ.உ.சி. சிலை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முள்ளக்காடு வடக்குத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்ற காசிராம் ( வயது 31). தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை பணி முடிந்து கார்த்திக் வீடு திரும்பி கொண்டிருந்தார். துறைமுகம் சாலை வ.உ.சி. சிலை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திக் உயிரிழந்தார்

    இது குறித்து தெர்மல் நகர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த செய்யது அலி ( 22) என்பவரை கைது செய்தார்.

    Next Story
    ×