என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க கோரி மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
    X

    கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திய வியாபாரிகளுடன் மேயர் சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க கோரி மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

    • சந்திப்பு பஸ்நிலையத்தின் ஒரு பகுதி முழுமையாக கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளது.
    • கீழ்தளத்தில் நிறுத்துவதற்கான வாகன காப்பகமும் தயார் நிலையில் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்திப்பு பஸ் நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு ரூ.78.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் கோரிக்கை

    பஸ் நிலையத்தில் 144 கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஒரு பகுதி பஸ்நிலையம் முழுமையாக கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளது. அங்கு 17 பஸ்கள் நிறுத்து வதற்காக நடை மேடையும், கீழ்தளத்தில் 106 கார்கள், 1,629 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கான வாகன காப்பகமும் தயார் நிலையில் உள்ளது.

    2 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க அடிமட்ட தூண்கள் கட்டப்பட்டு உள்ளது. மேல்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்ல லிப்ட் வசதிகள், டிஜிட்டல் திரைகள், கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட வேண்டியதுள்ளது.

    நகரின் முக்கிய பகுதியாக திகழும் சந்திப்பு பகுதியில் பஸ் நிலையம் இல்லாததால் வியாபாரிகள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சந்திப்பு ரெயில் நிலையம் செல்லும் பயணிகளும் அவதி யடைந்து வருகிறார்கள்.

    எனவே கட்டுமான பணி கள் முடிந்த பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    முற்றுகை

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் தூய்மை பணி யாளர்கள் உள்ளிட்ட ஆயிரம் பேர் இன்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்களுடன் மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பேசிய வியாபாரிகள், பல்வேறு தரப்பினரும் சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதி காரிகள் தரப்பில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி பஸ் நிலையத்தை திறக்க மறுக்கின்றனர். எனவே உடனடியாக பஸ் நிலை யத்தை திறக்க வேண்டும் என்றனர்.

    அப்போது மேயர் சரவணன், மாந கராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் சந்திப்பு பஸ் நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×