search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசின் கஜ் கவ்ரவ் விருது ெபற்ற டாப்சிலிப் யானை பாகன்கள்
    X

    மத்திய அரசின் கஜ் கவ்ரவ் விருது ெபற்ற டாப்சிலிப் யானை பாகன்கள்

    • சிறந்த பராமரிப்புக்காக கேரளாவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது
    • டாப்சிலிப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.

    பொள்ளாச்சி:

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலாந்தி வனச்சரகம் கோழிகமுத்தியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது.

    இந்தக் காப்பகத்தில் கலீம் உள்ளிட்ட கும்கி யானைகள் மற்றும் பெண் யானைகள், வயதான யானைகள் குட்டி யானைகள் என 26 யானைகள் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மலசர் இனத்தவர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் யானை - மனித மோதல் ஏற்பட்ட பகுதிகளில் கும்கிகளாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் டாப்சிலிப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. சமவெளியில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய யானைகள் பிடிக்க ப்பட்டு,கோழிகமுத்தி முகாமில் சிறப்பாக பழக்கப்படுத்தபட்ட பின்னர் கும்கியாக மாற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதில் மலசர் இனத்தவர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

    இந்தியா விலேயே யானைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள மாவூத்கள் மற்றும் காவடிகள் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக யானைகளை பராமரிக்கும் பணியில் உள்ள மலசர் இன மக்களுக்கு ''கஜ் கவ்ரவ்'' விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாப்ஸ்லிப் யானை பாகங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    கலீம் யானையை பராமரிக்கும் மணி, தேவி யானையை பராமரிக்கும் பழனிச்சாமி, சுயம்பு யானையை பராமரிக்கும் பிரசாத் உட்பட பலர் சேர்ந்து விருதை பெற்றனர்.

    இந்த விழாவில் ஆனைமலை புலிகள் காப்பக வனப் பாதுகா வலர் மற்றும் கள இயக்குனருமான ஆன ராமசுப்பிரமணியம், உலாந்தி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×