என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விழுப்புரம் அருகே இன்று பயங்கரம்: கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
  X

  விழுப்புரம் அருகே இன்று பயங்கரம்: கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.
  • கழுத்து அறுபட்டு கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்,

  விழுப்புரம்:

  விழுப்புரம் அருகே அகரத்து மேடு கிராமத்தில் பில்லூர்-பஞ்சமாதேவி செல்லும் சாலை ஓரம் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்க ப்பட்டு இருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கழுத்து அறுபட்டு கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வாலிபர் பிணமாக கிடந்த இடத்தில் எந்த ஒரு துளி ரத்தமும் இல்லை. எனவே மர்ம நபர்கள் அந்த வாலிபரை கடத்தி கொலை செய்து சாலை ஓரத்தில் வீசி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  கொலை செய்யப்பட்ட வாலிபரின் இடது மார்பில் தியாகு என்றும், இடது கையில் திவ்யா என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது. எனவே அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அருகில் உள்ள கிராமங்களில் யாராவது காணாமல் போனார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×