search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி எதிரே இன்று மாலை வர்த்தக மையத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டுகிறார்
    X

    அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க உள்ள டவுன் வர்த்தக மையத்தின் முகப்பு தோற்றத்தையும், வர்த்தக மையம் முன்பு பேனா நினைவு சின்னத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் இடத்தையும் படத்தில் காணலாம்.

    நெல்லை மாநகராட்சி எதிரே இன்று மாலை வர்த்தக மையத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டுகிறார்

    • ரூ.295 கோடி செலவில் முடிக்கப்பட்ட 50 மில்லியன் லிட்டர் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்.
    • பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான அடிக்கல்லை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அமைச்சர் கே.என். நேரு நாட்டுகிறார்.

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மாலை 4 மணிக்கு நெல்லை மாநகருக்கு வருகிறார்.

    ரூ. 427.56 கோடி

    தொடர்ந்து அவர் பாளை நேருஜி கலையரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநகர பகுதியில் ரூ.427.56 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    அதாவது ரூ.295 கோடி செலவில் முடிக்கப்பட்ட 50 மில்லியன் லிட்டர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.56.71 கோடி செலவில் கட்டப்பட்ட பொருட்காட்சி மைதான வர்த்தக மையம், ரூ.23.14 கோடியில் நெல்லை எம்.ஜி.ஆர். புதிய பஸ் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள பன்னடுக்கு இருசக்கர வாகன காப்பகம், ரூ.11.97 கோடி மதிப்பிலான நேருஜி கலையரங்கம், ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் கருப்பந்துறை, வண்ணார்பேட்டை பகுதியில் 3 இடங்களில் சலவைத்துறைகள், ரூ.12.31 கோடியில் 6 பசுமை பூங்கா, ரூ.8.40 கோடியில் 9 இடங்களில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு, ரூ.2.22 கோடியில் 9 இடங்களில் நகர்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர் கார்த்திகேயன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், விளை யாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் பல்லி க்கோட்டை செல்லத்துரை, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின், நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    பேனா நினைவு சின்னம் பணி

    தொடர்ந்து மாநகராட்சி மைய அலுவலகம் எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போற்றும் வகையில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான அடிக்கல்லை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அமைச்சர் கே.என். நேரு நாட்டுகிறார்.

    நிகழ்ச்சிக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலை வகிக்கிறார். அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, கலெக்டர் கார்த்திகேயன், மேயர் சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் ராஜூ கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×