என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
டி.என்.பி.எஸ்.சி.குரூப்-1, 2 தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியாகிறது
- சேலம், நாமக்கல் பட்டதாரிகள் எழுதிய டி.என்.பி.எஸ்.சி.குரூப்-1, 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகிறது.
- `குரூப்-2, 2 ஏ’ வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டது.
சேலம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் ேதர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்பட 67 வகை பதவிகளில் 5,529 காலியிடங்களை நிரப்ப `குரூப்-2, 2 ஏ' முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21-ந்தேதி நடைபெற்றது.
தேர்வில் 9.95 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பட்டதாரிகள் பலர் பங்கேற்று எழுதினர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு `குரூப்-2, 2 ஏ' வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் இந்த தேர்வு முடிவு வெளியிடப்படும்.
இதேபோல் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட குரூப்-1 பதவியில் 66 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும். அதேபோல், 50 குற்றவியல் உதவி வக்கீல் பதவிக்கான பிரதான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.