என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அருகே வனவிலங்குகள் பாதுகாப்புக்கு கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த வெங்காய வேலூர் கிராமத்தில் வனபாதுகாப்புக்கு அதே பகுதியை சேர்ந்த காதர் பாஷா என்பவர் வனத்துறை சரகஅலுவலர் சீனிவாசன் தலைமையில் புதியதாக தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

    இந்தநிகழ்ச்சியில் ரகமத்துல்லா, முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ், ஒன்றிய துணை செயலாளர் கருணாநிதி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். 

    வனப்பகுதியில் உள்ள விலங்குகளை வேட்டையாடுவதும், அப்பகுதியில் தேவையில்லாமல் சுற்றுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று கிராம மக்களுக்கு வனச்சரக அலுவலர் சீனிவாசன் அறிவுரை வழங்கினார்.
    திருவண்ணாமலை அருகே திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெற இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அந்த இளம்பெண் மாயமாகிவிட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண் எங்கு உள்ளார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மாயமான மணப்பெண் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை மீட்பதற்காக திருவண்ணாமலை தாலுகா போலீசார் பெங்களூர் சென்றனர்.

    இருந்தபோதிலும் அந்த பெண்ணை இன்னும் மீட்க முடியவில்லை. அவர் எங்கு பதுங்கி உள்ளார் என்பது தெரியவராததால் தொடர்ந்து அவரை தேடி வருகின்றனர். இதன் காரணமாக இன்று காலை நடைபெற வேண்டிய திருமணம் நடைபெறவில்லை. இது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து, வரும் 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் 1 - வது வார்டு பெரியார் நகர், பெரியம்மை தெருவில் 50 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், பொதுமக்கள் ஒருங்கிணைந்து சொந்த செலவில் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்துள்ளனர். இதற்கு, நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால், குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்க நகராட்சி ஊழியர்கள் முயன்றனர். இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து, வரும் 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரித்துள்ளனர். 

    ஆரணி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுகசாத்து சேர்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (45) விவசாயி. 

    இவருக்கு மங்கலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    தன்னுடைய சொந்த நிலத்தில் வேலையை முடித்து மின் மோட்டார் பீஸ் கேரியரை எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறில் பறிமுதல் செய்யப்பட்ட கம்மல்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பறக்கும் படை குழுவினர் ஒப்படைத்தனர்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் 3 சுற்றுகளாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    செய்யாறு- காஞ்சிபுரம் சாலையில் மண்டல துணை தாசில்தார் ஸ்ரீதேவி தலைமையிலான பறக்கும் படை நிலை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பைக்கில் வந்த 2 பேரை மடக்கி பாசோதனை செய்தனர். அவர்களிடம் 281 கம்மல்கள் இருந்தது. சரியான ஆதாரம் இல்லாததால் கம்மல்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கம்மல்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பறக்கும் படை குழுவினர் ஒப்படைத்தனர்.



    அத்திமலைப்பட்டு நாகநதியில் தீர்த்தவாரி நடைபெற்றது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு பூமி நீலாதேவி வரதராஜப்பெபூருமாள் கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் உற்சவர்களுக்கு நாகநதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. 

    அப்போது பக்தர்களும் நாகநதியில் புனித நீராடினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவம் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் சிங்கிரி லட்சுமி நரசிம்மர் கோவிலிலும் ரதசப்தமியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் குழாய்கள் திருடு போனது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்கள் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டது. 

    குபேரலிங்கம் பகுதியில் 2 இடங்களில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் பைப் லைன் அமைத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை பிடித்து வந்தனர்.

    இந்த நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி இணைப்பில் உள்ள குடிநீர் குழாய்கள் திருடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் அமைக்கப்பட்ட 8குடி நீர்நிலைகளும் திருடப்பட்டு விட்டதால் அங்கு பக்தர்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பல லட்சம் செலவு செய்து அமைக்கப்படும் இதுபோன்ற குடிநீர் குழாய்கள் சரியாக பராமரிக்கப் படாமலும், பாதுகாக்க படாமலும் பயனளிகாமல் போய்விடுகிறது. 

    எனவே எந்த திட்ட பணிகளை மேற்கொண் டாலும் அவைகளை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்பட வேண்டும்.

    இல்லையேல் இது போன்ற நிலைமைதான் ஏற்படும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். திறக்கப்பட்ட 2 மாதத்தில் இப்படி பயன்படாமல் சென்று விடுவதால் யாருக்கும் நன்மை இல்லை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து அவைகளைப் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருவண்ணாமலையில் அரசு பெண் ஊழியர் வீட்டில் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 49). இவர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த 5-ந் தேதி தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அவரது வீட்டை பூட்டி விட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். 

    இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய கவிதா, தனது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகையை திருடி சென்று இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி கவிதா திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. வியாபாரம் செய்வது போல் இருசக்கர வாகனங்களில் வலம் வரும் மர்ம நபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. 

    எனவே சந்தேகத்திற்கிடமாக தெருக்களில் வலம் வரும் நபர்களின் அடையாள அட்டை விவரங்களை பெற்று உரிய விசாரணை நடத்தினால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
    செய்யாறு ஆர்.டி-.ஓ. அலுவலகம் முன்பு கத்தி, கடப்பாரை, விஷபாட்டிலுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    செய்யாறு:

    செய்யாறு  ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு விவசாய  சங்கத்தினர் சார்பில் புருஷோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

     தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாள் வேலை 9 மணிக்கு மேல் இருந்தது. ஆனால் தற்போது காலை 7 மணி அளவில் வர சொல்வதால் காலையில் சமையல் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. 

    விவசாய பணிகளும் பாதிக்கப்படுவதாகவும் இதனால் 100 நாள் வேலைக்கு செல்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    இதனால் வருகைப்பதிவு நேரத்தை பழைய நடைமுறைப்படி காலை 9.30 மணி அளவில் ஆன்லைன் வருகை பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து விவசாய சங்கத்தினர் மண்வெட்டி, கத்தி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை கட்டி அவசர அவசரமாக செல்வது போலவும் மேலும் விஷ பாட்டிலுடன் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். பின்னர். 

    இது குறித்து கண்காணிப்பு அலுவலரை சந்தித்து மனு அளித்தனர்.
    போளூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் சுகாதார ஆய்வாளர் பரிதாபமாக இறந்தார்.
    போளூர்:

    போளூர் காதர்பாட்சா பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 23) ஆரணி அருகே உள்ள குண்ணத்தூரில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று பணி முடித்து தனது பைக்கில் போளூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது போளூர் - வேலூர் சாலையில் பாக்மார்க் பேட்டை என்ற இடத்தில் வந்தபோது எதிர் திசையில் வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக இவர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. 

    இதில் ஜெயசூர்யா தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய  மினி லாரி டிரைவர் நிற்காமல் சென்று விட்டார். சம்பவ இடத்திற்க விரைந்து வந்த போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    விபத்து குறித்து ஜெயலுசூர்யாவின் தாயார் விஜயா போளூர் போலீசில் புகார் செய்தார்.  அதன்பேரில்  போலீஸ்  இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் சப்&இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருகே மர்ம விலங்கு கடித்து 12 ஆடுகள் பலியானது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காஞ்சி ரோட்டில் வனப்பகுதியை ஒட்டி ஆடையூர் கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த விஜி என்பவர் மனைவி தெய்வானை 25 ஆடுகளை வளர்த்து வருகிறார். 

    இவர் தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு இரவில் பட்டியில் அடைத்து செல்வார். நேற்றும் அதேபோல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு பட்டியில் அடைத்து வைத்திருந்தார். 

    இந்நிலையில் இன்று காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த 25 ஆடுகளை மர்ம விலங்கு இருப்பது தெரியவந்தது. இதில் 12 ஆடுகள் இறந்து கிடந்தன.மேலும் 13 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தன. அவைகளை வனப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்து கொன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    மேலும் அந்த பகுதியில் வசித்து வரும் தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொன்றதா? என்பதும் தெரியவில்லை.ஆடுகளின் குடலைக் கிழித்து மர்ம விலங்கு சாப்பிட்டு உள்ளது. இதுபற்றி தெரியவந்ததும் ஆடையூர் கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேசன் கடை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    தமிழக அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்து வழங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 17 சதவீத அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    இந்தப் பாரபட்ச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தொ¤வித்து தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் பணியாளர்கள் சிறு விடுப்பு எடுத்து நியாயவிலைக் கடைகளை மூடி தங்கள் எதிர்ப்பை தொ¤வித்தனர். 

    இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ரேசன் கடை ஊழியர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 1,627 ரேசன் கடைகளில் 1,573 ரேசன் கடைகள் செயல்படவில்லை. 

    இந்த போராட்டம் தொடர்பாக திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.சி .சேகர், மாவட்டச் செயலாளர் சண்முகம்,  மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    தமிழக அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரேசன் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய 17 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். 

    இது கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய பணியாளர்கள் மனதை வேதனை அடைய செய்துள்ளது.  

    எனவே இதற்கு கண்டனம் தொ¤விக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் ரேசன் கடை பணியாளர்கள் சிறு விடுப்பு  எடுத்து எங்கள் எதிர்ப்பை தொ¤வித்து வருகிறோம். 

    எங்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க முன் வராவிட்டால் சங்கத்தின் வழிகாட்டுதல்படி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×